வேலை பறிபோனதால் விரக்தி: வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
" alt="" aria-hidden="true" />

ஆவடி, 

 

ஆவடி அடுத்த வீராபுரம், கிரிஜா நகர், பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 26). இவர் கடந்த 12 ஆண்டுகளாக ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை தொழிற்சாலை நிர்வாகம் பணியிலிருந்து நிறுத்திவிட்டதாக தெரிகிறது.


 


 

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் உள்ளவர்களிடம் சோகத்தில் அழுது புலம்பியுள்ளார். இதற்கு வீட்டில் உள்ளவர்கள் ஆறுதல் கூறியும், சமாதானம் அடையாத கணேஷ் தொடர்ந்து விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

 

தூக்குப்போட்டு தற்கொலை

 

இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், கணேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Popular posts
மாஞ்சோலை பகுதியில் மக்கள் வாழ்வாதாரத்திற்காக அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Image
வாணியம்பாடியில் காவல் துறை சார்பில் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்களை மாவட்ட கண்காணிப்பாளர் விஜய்குமார் வழங்கினார்.
Image
உலக சிறுநீரக தினம் வேலூர் சிஎம்சி யில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
Image
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பிற்காக விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கசாயம் கொடுக்கப்பட்டது
Image
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்
Image